இலவசங்கள் வேண்டாம்
பறக்க ஆசை எனக்கு விமானங்கள் வேண்டாம் சிறகுகள் போதும்
ஏழைகளின் பசி தீர்க்க ஆசை எனக்கு உணவுகள் வேண்டாம்
தானியங்கள் போதும் .!
தினம் விழி மூட மறுக்கும் இரவுகளின் வறுமை போக்க ஆசை
எனக்கு மாளிகைகள் வேண்டாம்
மர நிழல்போதும் !
எனக்கு நாட்டை ஆளும் ஆசை இல்லை
நான் வாழும் நாட்களை ஆண்டால் போதும்
இவை அனைத்தும் எனக்கு தனித்தனியே வேண்டாம் .
கல்வி என்ற ஒன்றைக் கொடுங்கள்
கடந்துவிடுவேன் காலங்கள் பல
வென்றுவிடுவேன் தேவைகள் அனைத்தும் .!
எங்கும் எதிலும் இலவசம் அதனால்தான்
முயற்சிகள் இன்னும்
ஊனமாகவே இருக்கிறது இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான்
வாடகை கால்கள் ,
வாடகை சுவாசம் ,
வாடகை இரவுகள் ,
ஏன் இந்த இலவசங்களால் வாழ்வின் ஒவ்வொரு கணங்களும்
உறக்கத்தில் தொலைத்த கனவாகவே கழிந்துவிட்டது .
எஞ்சிய நாட்களிலாவது விழித்துக்கொள்ளுங்கள் .
இல்லையென்றால் கெஞ்சிக் கேட்பதற்குக்
கூட அஞ்சி நிற்கும் நிலை வரலாம் .!....
-
கருத்துகள்
கருத்துரையிடுக