அகதிகள்



கனடா போன்ற நாடுகளில் அகதிகளாக சென்ற இலங்கை தமிழர்கள், அந்த நாட்டில் பாராளுமன்ற உறுப்பினராக வரும் அளவுக்கு வளர்ந்துள்ள நிலையில். 

இந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகள் அடிப்படை வாழ்வாதார வசதிகள் கூட இன்றி பல ஆண்டுகளாக முகாம்களிலே இன்னும் வாழ்ந்து வருவது வேதனைக்குரியது. தமிழர்கள் என்பதால் தான் இந்திய அரசாங்கம் திட்டமிட்டு அகதிகளை கூண்டில் அடைத்து வைத்துருக்கிறது.

பொதுவாக ஐரோப்பா, கனடா
, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அகதிகளாக சென்றோருக்கும் இந்தியாவுக்கு அகதிகளாக சென்றோருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள உரிமைகள் சலுகைகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்வோரின் நிலைமை படுமோசமானது.

இதன் அர்த்தம் மேற்குலக நாடுகளில் அகதிகள் சுகபோகமாக வாழ்கிறார்கள் என்பது அல்ல. அவர்கள் சொல்லொனா துன்பங்களுக்கு மத்தியில் அங்கு சென்றடைந்து கடுமையாக உழைத்து பொருளாதார ரீதியிலும் உரிமை அடிப்படையிலும் உயர்ந்துள்ளனர். இவர்களுள் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டுவோரின் எண்ணிக்கை ஒப்பீட்டு ரீதியல் மிகக்குறைவு.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்