இணைய தமிழ் உறவுகளே உங்கள் தமிழ் நண்பர்களோடு பேசும் போது தமிழில் எழுதி உரையாடுங்கள்.

பேஸ்புக் இணைய தமிழ் உறவுகளே.. 
உங்கள் பேஸ்புக்கில் தமிழ் நண்பர்களோடு பேசும் போது தமிழில் எழுதி உரையாடுங்கள். எங்களுக்கென்று சொந்தமாக ஒரு மொழி இருக்கும்போது, நாம் ஏன் மொழி இல்லாதவன். மாறி ஆங்கிலத்தில் எழுதி உரையாட வேண்டும். எமக்கான அடையாளமே எம் மொழிதான். 20 ஆயிரம் வருடத்திற்கு முன்பு வந்த ஆங்கிலத்திற்க்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை. ஏன் நீங்கள் 50 ஆயிரம் வருடத்திற்கு முன்பு உருவான தமி
ழ் மொழிக்கு கொடுப்பதில்லை.

பெருபான்மையான தமிழர்கள் தங்களின் சொந்த மொழியில் எழுத வெக்க படுகிறார்கள், அவமானமாக நினைக்கிறார்கள். ஆங்கிலத்தில் எழுதுவதும். தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசுவதும். (ஸ்ரைளாக) நினைக்கிறார்கள். இது எப்படி இருக்கு தெரியுமா? வீடு நெறய சாப்பாடு வைத்து கொண்டு. வீதியில் இறங்கி சாப்பாட்டுக்கு பிச்சை எடுப்பது போல் உள்ளது. ஏன் இப்படி இருக்கின்றீர்கள்.

உகளுக்கு உங்கள் தாய் மொழியில் எழுத ஏன் வலிக்குது. தமிழர்களுக்கு தமிழில் கூட கையெழுத்து போட தெரியவில்லை. அதுவும் ஆங்கிலத்தில் தான் போடுகிறார்கள். அப்படியே தமிழில் கையெழுத்து போட்டாலும் (இன்சலை) ஆங்கிலத்தில் போட்டு விட்டு பெயரை தமிழில் எழுதுகிறார்கள். எதிலேயும் கலப்படத்தை விரும்பாத தமிழர்கள். மொழியை மட்டும் ஏன் கலப்படம் செய்கின்றீர்கள். இவர்கள் அப்பாக்கள் வேல்லைகாரனா என்று தெரியவில்லை.

இரண்டு ஆங்கிலயர்கள் சந்தித்து கொண்டால். அவன் மொழியில் தான் அவன் ஹாய் சொல்கிறான். தமிழில் வணக்கம் சொல்ல மாட்டான். நம்ம தமிழர்கள் அப்படியா? இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால். இணையத்திலும் சரி. பொது இடத்திலும் சரி ஆங்கிலத்தில் தான் நலம் விசாரிக்கிறாங்க. (ஹாய்). என்று தான் சொல்லுறாங்க. வணக்கம் சொல்வதில்லை. கடைசியில் பாய் என்று சொல்லிவிட்டு போய் விடுவார்கள். நம் தாய் மொழியை நாம் பேசாமல். எழுதாமல். வேறு எந்த நாய் பேசும். இதுக்குதான் நம் முப்பாட்டன் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தானா எதற்கும் முயற்சி செய்யவேண்டும். கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டேன் போல மண்ணிக்கவும்.

எனவே நாங்கள் தமிழர்கள் கண்டால் தமிழில் பேசுவோம்.
இணையத்தில் தமிழனை கண்டால் தமிழில் எழுதி பேசுவோம்
நமது எண்ணங்களை அழகு தமிழில் எழுதி இணையத்தில் தவவிடலாமே. (இதோ தமிழில் எழுத இலகுவான மென் பொருள் நீங்களும் தமிழில் எழுதுங்கள். எழுத்து பிழையாக இருந்தாலும் பரவையில்லை தமிழில் எழுதுங்கள் தமிழர்களே

நன்றி_ எஸ். சுரேஷ் 


http://www.google.com/transliterate/indic/Tamil

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்