பெரியார் சிலை பக்தர்கள் மனத்தைப் புண்படுத்துகிறதாம்

பெரியார் சிலை மீது பக்தர்களுக்குக் கோபம் கிடையாதாம். சிலைக்குக் கீழே தந்தை பெரியார் சொன்ன வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளதே அதுதான் பக்தர்கள் மனத்தைப் புண்படுத்துகிறதாம்.உண்மையிலேயே பக்தர்கள் மனத்தைப் புண்படுத்துகிறதா? எனச் சற்று விவரமாகப் பார்ப்போம்.

தந்தை பெரியார் சிலைகள் கீழ், கடவுள் மறுப்பு வாசகம் பொறிக்கப்படுகிறது. அவை. கடவுள் இல்லை - கடவுள் இல்ைலை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி - தந்தை பெரியார்.

இதில் எந்த இடத்தில் தந்தை பெரியார் கடவுளை இழிவுபடுத்தினார். அவமானப்படுத்தினார் என்பதைச் சீர்தூக்கிப் பாருங்கள். எந்த இடத்திலும் கடவுளைப் பெரியார் இழிவுபடுத்தவே இல்லை என்பதுதான் உண்மை. கடவுள் இல்லை எனச் சாதாரணமாகச் சொன்னால் கூட ஏதாவது மாற்றங்களைச் செய்து விடப் போகிறார்கள் எனக் கருதிய பெரியார், இரண்டு முறை இல்லை என்று சொல்லி விட்டு மூன்றாம் முறை இல்லவே இல்லை என அழுத்தம் கொடுத்துச் சொன்னார். தந்தை பெரியார் கடவுளைத் திட்டவே இல்லை.


ஏன் என்றால் இல்லாத கடவுளை ஏன் திட்ட வேண்டும். கடவுள் உண்டு என்பதோ, இல்லை என்பதோ கடவுளைத் திட்டுவது ஆகாது. அடுத்து கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று சொன்னார். கடவுளை முட்டாள் என்று பெரியார் சொல்லவில்லை. ஏனெனில் இல்லாத கடவுளை அறிவாளி என்றோ முட்டாள் என்றோ சொல்ல வேண்டியதில்லை. 
மிகமிகத் தெளிவாகக் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றார். இதற்காக யார் கோபப்பட்டாலும், அவர்களும் கடவுள் கற்பிக்கப்பட்ட ஒன்று என்பதையும், அப்படிக் கற்பித்தவன் செயல் முட்டாள தனமானது என்றும் ஒத்துக்கொள்வதாகவே பொருள்படும். 
கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன் என்றார். 


இங்கேயும் கடவுளை அயோக்கியன் என்று தந்தை பெரியார் சொல்ல வில்லை. ஏனெனில் இல்லாத கடவுளை ஏன் அயோக்கியன் என்று சொல்லவேண்டும் என்பதுதான் அவர் கருத்து. ஆனால் கடவுள் என்ற தன்மையைப் பரப்புகின்ற செயலைச் செய்பவன், செய்கிற மனிதன்தான் அயோக்கியன் ஆவான். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றால் கடவுள் காட்டுமிராண்டி என்பது கிடையாது. கடவுளை வணங்குபவன்தான் காட்டுமிராண்டி என்பதாகும். ஆகவே தந்தை பெரியாரின் வாசகத்தை ஆழ்ந்து பார்த்தால் உண்மை தெளிவாகப் புரியும்.



தந்தை பெரியார் சிலை அமைக்க 1972 ஆம் ஆண்டிலேயே உரிய பணம் கட்டணமாகச் செலுத்தி, தமிழக அரசிடம் அனுமதி பெற்ற இடத்தில்தான சிலை வைக்கப்பட்டுள்ளது. 200 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தை 20 அடி உயரமுள்ள பெரியார் சிலை மறைக்கிறது என்பது மமதை வாதம். மதவாதம் எனலாம். அப்படி என்றாலும் ராஜகோபுரம் கட்டியது தநதை பெரியார் சிலைக்கு அனுமதி பெற்ற பின்தான் என்பதால் அவர்களின் உள்நோக்கம் வெளிப்பட்டு விட்டது.




அனுமதியின்றி - வரைபடம் இன்றி கட்டப்பட்டுள்ள கோயில்களும், நடைபாதை கோயில்களும் அனுமதியோடு வைக்கப்படுகிற சிலைகளைப் பாாத்துச் சிரிக்கும் என்றால், அந்த ஆணவச் சிரிப்பை அடக்கத்தான் வேண்டும். 













 கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், 










கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன் __நன்றி...._
















சுரேஷ்....




கருத்துகள்

  1. ராமசாமி நாயக்கர் பேசியதெல்லாம் சித்தாந்தம் என நம்பிக்கொண்டிருக்கும் ஒரு பெருங்கூட்டம் அவரது ஜாதி எதிர்ப்பிற்கான உள்நோக்கங்களை முழுமையாக உணர்ந்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது ௨ண்மை தான் பெரியார் ஒரு மனநல நோயாளி

      நீக்கு
    2. நூற்றுக்கு நூறு ௨ண்மை....பெரியார் இருந்திருந்தால் அவரையும் திருத்தி இருக்க முடியாது....இப்போதுள்ள அவரது அடிவருடிகளையும் திருத்த முடியாது....

      நீக்கு
  2. பெயரில்லா11 மே, 2022 அன்று 1:56 PM

    EVR statue is erected in front of Rajagopuram on the right side.
    Why he is sitting outside the temple corner and what is he waiting for ?
    If he does not believe in Temple and God, why he should sit in front of a temple ? He could have sat in front of a theatre or park or other places ?
    Why he likes to sit in front of temple as if doing penance ?

    EVR said a tamilian as kaatumirandi ? Who was he ?
    This Suresh Sir is a tamilian ? Does he accept this EVR view ?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்