சிந்திக்க சில நொடிகள்



அநியாயம் என்பது வாழ்க்கையோடு இணைந்த ஒரு பாகம்.
ஒரு மனித மனதால் எதை நினைத்து, நம்பி, அதற்காக செயல்பட முடியுமோ, அதை நிச்சயம் அடைய முடியும்


பொறுமை இருந்தால் பல கதவுகள் திறக்கும்.
நாம் முழு ஆனந்தத்துடன் பிறந்தாலும் வாழ்க்கை முழுவதும் சந்தோஷத்தைத் தேடும் பிச்சைக்காரர்களாக வாழ்கிறோம்.


தேடுவது எனபதே சந்தோஷம் தரும் விஷயம். 
நீங்கள் இங்கு, இப்பொழுது சந்தோஷமாக இல்லை யென்றால் 
எங்கும் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கமுடியாது.


வெறுப்பு மனதை குப்பையாக்குகிறது. 
அமைதி அதை தூய்மையாக்குகிறது


விவேகமுள்ளவர்களுக்கு சோதனைகள்தான் சிறந்த ஆசான்
நம்மை மாற்றி கொள்வோம். 
பிறகு பாருங்கள் உலகம் உங்களுக்கு சுவாரசியமான விளையாட்டாகும்.


ஞானம் பெறாதவர்களுக்கு எந்தச் செய்தியும் நல்ல செய்தியல்ல.
நாமே விதித்துக் கொண்ட வாழ்க்கை முறையால் வாழ்க்கையை அநாவசியமாகக் குழப்புகிறோம்.


முடிவே இல்லாதவை பிரபஞ்சம் மற்றும் காலம். 
இதில் நாம் எங்கு இருக்கிறோம்.


மனிதன் தன்னுடைய கற்பனை உருவத்திற்கு பலியாகுபவன்.


பல சமையங்களில் ஒரு நண்பனை இழக்கும் வரை அவரை நாம் அடையாளம் காண்பதில்லை.


தோல்வியின் சிதைகளுக்கிடையே துக்கம் வசித்திருக்கும்.
மிக தாழ்வான சுய கவுரவம் உலகத்தை நரகமாக்கும்.
மன்னிப்பதால் இதயம் மேலும் பாசத்தால் நிரம்பும்


வாழ்க்கையில் திரும்ப வராத மூன்று சொல் 
1.பேசிய வார்த்தைகள் 
2. தவறவிட்ட சந்தர்ப்பங்கள், 
3. இழந்த ஒரு கணம்


ஒரு கூர்மையான மனது எந்தக் கதவையும் திறக்கும். 
ஒரு சோம்பலான மனதுக்கு கதவுகளை மூடத்தான் தெரியும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்