என் பிறப்பு தமிழ் பிறப்பு, தமிழ் தாய் தந்தை வளர்ப்பு.
ஒரு மனிதனுடைய சிந்தனைகளை வெளிப்படுதுவதட்கு உதவியாக இருக்கும் கருவி, அவர் அவருடைய தாய் மொழிதான். தாய் மொழியை பேசுவது, குழந்தைகளோடு உரையாடுவது இவையெல்லாம் அன்பையும், பண்பையும், குடும்பத்தின் ஒட்டுறவையும், வளர்க்கக்கூடிய வலிமை உடையது.
இப்படி அழகாக தோன்றும் தாய்மொழியாம் தமிழை, புலம் பெயர் தமிழர் சிலர் பேச மறுக்குரார்கள், சிலர் பேசுவதே இல்லை. இந்த பிரச்சனைக்கு பல காரணங்கள் உண்டு, அதில் இரண்டு காரணங்களை இப்போது பார்போம்.
1 . புலம் பெயர் தமிழ் பிள்ளைகள், அவர்களுக்கு சொந்தமான தாய்மொழியாம் தமிழை பேசுவதற்கு வாய்ப்பு கிடைப்பது, கடினமாகிவிட்டது, காரணம் அவர்கள் வாழும் நாடுகளில், அந்த நாட்டின் பாசை முக்கியதுவ படுத்தி பேச படுகின்றது. சில மேற்கதைய நாடுகளில் தாய் மொழியை பாடசாலைகளில் கற்று கொடுப்பதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளத.
2 . சில தமிழ் பிள்ளைகள், சில தமிழ் இளைஞர்கள், தமிழை பேசாமல் வேறு ஒரு பாசையை பேசுகிறார்கள். சில தமிழ் பெற்றோர்கள்கூட தமிழை பேசுவதில்லை, குழந்தைகளிடம் மட்டும் அல்ல, பெற்றோர்கள் மற்ற பெற்றோர்களிடம் கூட தமிழை பேசுவதில்லை.
இப்படி பல காரணங்கள் உண்டு, இந்த பிரச்சனைக்கு முடிவுதான் என்ன?
இந்த பிரச்சனைக்கு, பெற்றோர்கள்தான் காரணம் என்று சிலர் கருதுகிறார்கள், ஆமாம் இப்படி ஒரு பிரச்னை , நம் கண் முன்னால் தோன்றும்போது, பெற்றோர்கள் மட்டுமே குற்றவாளிகளாக தோன்றுகிறார்கள். அனால் பெற்றோர்கல்மீது தவறுகளை போடுவதை விட்டு விட்டு, அவர்களுக்கு இந்த பிரச்சனையால் வரும் பின் விளைவுகளை பற்றி எடுத்து சொள்ளவேன்றும்.
சில பெற்றோர்களுக்கு, இந்த பிரச்சனையால் அவர்களது குழந்தைகள், எதிர்காலத்தில் எவ்வாறு பாதிக்க படுவார்கள் என்றும் கூட அறியாமல் வாழ்கிறார்கள். பிரச்னை, பிரச்னை, என்று சொல்வதை விட, பிரச்சனைக்கு தீர்வுகளை பகிர்ந்து கொள்வதே சரியான விடயமாகும்.
தாய் மொழியாம் தமிழ் இறந்துவிட்டது என்று சிலர் கருதுகிறார்கள், இது தவறான விடயம், மொழி என்பது ஒரு பொதும் இறந்துவிடாது. எம்மை சுத்தி என்றும் அழியாமல் இருக்கும் இயற்கையை போல, எம் தாய்மொழியும் நம்மை சுத்தியபடியே இருக்கும்.
ஒரு மனிதன், தன் உணர்வை வெளிப்படுத்வதட்கு மிக மிக எளிமையான வலி, அவனுடைய தாய் மொழிதான், எல்லாத்தையும் விட ஒரு ஆச்சரியம், தாய் மொழியில் ஒரு மனிதன் சிந்திக்கும்போதுதான் விரைவாக சிந்திக்குறான், இன்னும் சொல்ல போனால் புதிய புதிய கருத்துகளை சிந்திக்குரன்.
அனால் சிலர் ஆங்கிலத்திலேயே சிந்தித்து பேசுகிறார்களே, என்பது ஒரு கேள்வியாக இருக்கலாம், அதற்கு காரணம், கிட்ட தக்க தாய்மொழி போல குடும்பத்தில் பேச படுகிற மொழியாக, ஆங்கிலம் மாறிவிட்டது. ஆங்கில மொழி ஒருபோதும், ஒரு தமிழனுக்கு தாய்மொழியாக மாறிவிடாது.
இன்று உலகளவில் ஆயிரக்கணக்கான மொழிக் கூட்டங்கள் இருந்தாலும் பேச்சளவிலும், எழுத்தளவிலும் உயிர்ப்புடன் இருப்பது சில நூறு மொழிகள் தான். அதிலும் பழமை வாய்ந்ததாக, பாரம்பரியம் வாய்ந்ததாக, சிறப்பு வாய்ந்ததாக, தங்களுக்கென்று சுயத்தைக் கொன்ற மொழிகள், வெகு சிலதான். அதில் ஒன்று நம் தாய்மொழியான தமிழாகும்.
அமாம் என் அன்பு நெஞ்சங்களே, இது ஒரு கவலைக்குரிய விடயம் என்று சொல்லிவிட்டு, சலித்து போய்விடதிர்கள். ஒவ்வொரு தமிழ் உயிரங்களுக்கும் சொந்தமான மொழி, அவனது தாய் மொழியான தமிழ் மொழி மட்டுமே. மறந்து விடாதிர்கள், எம் மொழி ஒருபோதும் அழிந்துவிடாது, நாம் மொழியவிட்டு அழிந்து போகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
என் பிறப்பு தமிழ் பிறப்பு, தமிழ் தாய் தந்தை வளர்ப்பு.
கருத்துகள்
கருத்துரையிடுக