தமிழ் இனி மெல்லச் சாகும்! விழித்திடு தமிழா

ஆங்கில மொழி வந்த பிறகு ஆங்கில மொழி உலகமொழியான பிறகு இதுவரைக்கும் 247 மொழிகள் அழிந்து இருக்கின்றது ஆங்கில மொழியால் அந்த அளவுக்கு எல்லா மொழிகளிலும் ஆங்கிலம் ஊடுறு இருக்கிறது. 

உதாரணம் ஒருநாளைக்கு நாம பேசுற தமிழில் மொழியில் நமக்கே தெரியாம எத்தனை ஆங்கில சொற்களை தமிழோடு கலந்து பேசுகிறோம் யோசித்து பாருங்க, இப்படிதான் ஒவொரு மொழியிலும் ஆங்கிலம் ஊடுருவி இருக்கிறது. இன்னும் 50 ஆண்டுகளில் முழுமையாக ஆங்கிலம்  ஊடுருவிடும் நம் மொழியில் காரணம் இப்ப உள்ள தமிழர்கள் ஆங்கில மோகத்தில் தான் இருக்கிறார்கள், தமிழ் மொழிமேல் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை தன் பிள்ளைகளை ஆங்கில மயத்தில் தான் படிக்க வைக்கிறாங்க பேச வைக்கிறாங்க.  50 ஆண்டுகளில் முழுமையாக ஆங்கிலம்  ஊடுருவிடும் என்பதை உறுதியா சொல்ல முடியும். இன்னும் 100 ஆண்டுகளில் தமிழ் மொழி எப்படி இருக்கும் என்று என்னால் இப்பவே யூக்கிக்க முடிகிறது  


சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா (ஸ்மித் ஜோனெஸ்") என்ற பெண்மணி இறந்து விட்டார். இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது காரணம், அவர் இறந்து போகும் போது, ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தான் இருந்தார்.

அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது. அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமானதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள்

உலகின் பெரும்பாலான மொழிகள், இரண்டு வாரத்திற்கு ஒரு முறை, உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள்.
அதில் தமிழ் மொழியும் அடங்கியுள்ளதாம்

ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டு இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. இன்றைய சன்னதியினரும், அடுத்த சன்னதியினரும் தமிழை படிக்கவோ, எழுதவோ, ஆர்வம் காட்டுவதில்லை தற்போது எல்லாம் ஆங்கில மோகத்தில் போய்கொண்டு இருக்கிறார்கள். என்று அந்த அறிக்கையில் சொள்ளபட்டு இருக்கிறது

தமிழ் இனி மெல்லச் சாகும்! விழித்திடு தமிழா
ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்கள் பேசுகின்ற மொழியை அழித்து விடுங்கள் அந்த இனம் தானாக அழிந்துவிடும் என்பார்கள். எனவே தமிழை பற்றி பேசுவது எம் இனம் அழிவதை காப்பற்ற என்று புறிந்து கொள்ளுங்கள்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்