மகனை கண்டித்த பெற்றோருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை


நோர்வேயில் 7 வயதான தமது மகனை கண்டித்த இந்தியப் பெற்றோருக்கு சிறை தண்டனை விதித்து நோர்வே நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறுவன் சாய் ஸ்ரீராமின் தந்தை சந்திரசேகருக்கு 18 மாத சிறையும், தாய் அனுபமாவுக்கு 15 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

சந்திரசேகர்; நோர்வே நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரது மனைவி அனுபமா. இவர்களது ஏழு வயது மகன், ஆஸ்லோ நகர் பள்ளியில் படிக்கிறான்.

சமீபத்தில் இவர்களது மகன், பள்ளியில், பேன்ட்டிலேயே, சிறுநீர் கழித்து ஈரமாக்கிக் கொண்டான். இதற்காக சந்திரசேகர், மகனை கண்டித்துள்ளார். மறுநாள், பள்ளியிலிருந்து ஒரு பொம்மையை எடுத்து வந்து விட்டான். இதனால் கோபமடைந்த சந்திரசேகர், "இது போன்று செய்தால், உன்னை, ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பி விடுவேன்' என, மிரட்டியுள்ளார்.

இந்த விஷயத்தை சிறுவன், தன் பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளான். சிறுவனை, அவனது பெற்றோர் தொடர்ந்து கொடுமைப்படுத்துவதாக ஆசிரியை, போலீசில் புகார் செய்துள்ளார். சமீபத்தில், இந்தியா வந்த சந்திரசேகர் தம்பதியர், மகனை, ஐதராபாத்தில், உறவினர் வீட்டில் விட்டு சென்று விட்டனர். நோர்வே திரும்பிய, சந்திரசேகரையும், அவரது மனைவியையும், அந்நாட்டு, போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து நோர்வே, போலீஸ் அதிகாரி குர்த் லிர் குறிப்பிடுகையில், "சிறுவனின் உடலில், சூடு வைத்த காயமும், தழும்பும் உள்ளது. இதை வைத்து பார்க்கும் போது, சந்திரசேகர் தம்பதியர், மகனை அதிகமாகவே கொடுமைப்படுத்தியது தெரியவந்துள்ளது. எனவே, தான் அவர்களை கைது செய்துள்ளோம்,'' என்றார்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்