பிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் இறுக்கக் கட்டியணைத்த மரடோனா!
\
பிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் இறுக்கக் கட்டியணைத்த மரடோனா! தமிழர்களிற்கு தெரியாத பிரபாகனின் மகிமை மரடோனாவிற்கு தெரிந்துள்ளது!!உலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளாவியளவில் மரடோனாவிற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் இன்றும் துளியும் குறையவில்லை என்றால் மிகையில்லை.
ஆர்ஜென்ரீனா நாட்டின் கால்பந்தாட்ட முகவரியான மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அவர் சென்ற இடங்கள் எல்லாம் ரசிகர்கள் குவிந்து பார்த்து மகிழ்ந்தார்கள்.
இந்திய சுற்றுப்பயணத்தில் ஓர்நாள் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது விடுதிக்கு வெளியே ஏற்பட்ட ஆரவாரம் தனது ரசிகர்களுடையதென உணர்ந்து அவர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது வாயிலில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவலரிற்கு கைகொடுத்து வணக்கத்தை தெரிவித்த மரடோனா அவரது பெயரை கேட்டுள்ளார்
ஆனால் அந்த காவலருக்கு அது புரிந்திருக்கவில்லை.
அப்படியிருந்தும் அந்த காவலரது சீருடையில் அவருடைய பெயர் குத்தப்பட்டிருந்த பெயர்பட்டியை பாரத்து உற்சாகமான மரடோனா அந்த காவலரை இறுக்கக் கட்டியணைத்து பேருமகிழ்வடைந்துள்ளார். அந்தக்காவலரது பெயர் பிரபாகரன். நடப்பவை அந்த காவலரிற்கு என்னவென்று ஒன்றும் புரியாமல் குழம்பி போயிருந்தார்.
இதனையுனர்ந்த மரடோனா தனது கையில் பச்சைகுத்தியுள்ள புரட்சியாளர் சேகுவேராவின் படத்தை காட்டி புரட்சி வீரரான சேகுவேராவை மிகவும் பிடிக்கும் அதைவிட பிரபாகரனையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். பிரபாகரன் ஒரு புரட்சியாளர் என்றும் ஒப்பற்ற ஒரு புரட்சியாளன் என்று புகழ்ந்தார் அந்த பெயரை நீங்கள் வைத்து இருக்கிறீர்கள் அதான் உங்களை சந்தோஷத்தில் கட்டி அணைத்தேன் என்றார்
புரட்சியின் நேற்றைய உருவான சேகுவேராவை பச்சைகுத்தியுள்ள மரடோனா இன்றைய புரட்சியின் வடிவமான பிரபாகரனை இதயத்தில் பதித்துள்ளார்.
பிரபாகரன் என்ற பெயருடைய காவலரை கண்டதற்கே இவ்வளவு மகிழ்ச்சியடைந்துள்ளார் என்றால் பிரபாகரனை எந்தளவிற்கு நேசிக்கின்றார் மரடோனா.
தேடாமல் கிடைத்தால் அதன் அருமை தெரியாது என்பார்கள். அதுபோல தமிழினத்தின் விடுதலையை (சில தமிழர்கள்) விரும்பாத சூழ்நிலையில் பிரபாகரன் அவர்களே தாமாக முன் வந்து விடுதலைக்கான போராட்டத்தை நடத்தினார்
எம்மவர்களில் எத்தனையோ பேர் பிரபாகரனது விடுதலைப் போராட்டத்தையும் போராட்ட வழிமுறைகளையும் கடுமையாக விமர்சித்து வருவதுடன் பங்களிக்காது ஒதுங்கியே இருந்து வருகின்றார்கள். ஆனால் உலகின் எங்கோ ஒரு மூலையில் தமிழினத்திற்கு நேரடி சம்பந்தமில்லாத மரடோனா தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது மகிமையினை உணர்ந்துள்ளார் என்பது உலகத்தமிழர்கள் சிந்திக்க வேண்டிய விடையமாகும்.
மிக அருமையான பதிவு... எனக்கும் படித்ததில் பிடித்துப் போனது...
பதிலளிநீக்கு