வேற்றுமை கொண்ட தமிழா !!! இனி உனக்குள்
ஒற்றுமை எப்போது ??? மானம் போன பின்னும் இன்னும் உனக்கு ஞானம் வரவில்லையா ???

காலம் கடந்த பின்னும் வீர வசனம் பேசிக்கொண்டே திரியும் தமிழா !!! போதுமடா சொல்லின் வடிவங்களை செயலிலே காட்டடா !! உண்மைகள் என்றும் உறங்குவதில்லை, அநீதிகள் என்றும் நிலைப்பதும் இல்லை, ஒற்றுமை எனும் ஆயுதம் ஏன்தி, துரோகம் எனும் கிளை பிடுங்கி உன் சந்ததிக்கு வாழ்வு கொடு தமிழா !!!

இழப்புக்கள் எமக்கு புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல, என்ற தலைவின் வரிகளை ஏற்று மாவீர்களின் இலட்சிய கனவுகளை குழிதோண்டி புதைக்கபட்டதே தமிழா !!!

வீழ்வது என்பது இயல்பானதே, வீழ்ந்தே கிடப்பது கேவலமானது, அழிவை கண்டு அயர்ந்து போகாது, ஆக்கம் காக்க ஆவேசமாய் செயல்பாடு தமிழா !!!

காலத்தின் தேவை உணர்ந்து உலகை அறிந்து கொண்டு பகைவனின் பலவீனம் அறிந்து ஆவேசமாய் செயல்பாடு தமிழா !!! தமிழா தமிழா காலச்சக்கரம் உன் கரங்களிலே - வேகம் கொண்டு வீறு கொண்டு எழு தமிழா !!!
சிந்திப்போம்??? செயல்படுவோம் ???
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்