கறுப்பு யூலை (Black July) இலங்கையில்

கறுப்பு யூலை (ஆடிக்கலவரம், Black July) என்பது யூலை 23, 1983 தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்ககளைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், நூற்று கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வலுறவுகுட்படுதியும், 3000 பேர் வரை படுகொலை செய்த ஒரு கொடுமையான நிகழ்வாகும்....இதன் பின்னரே இலங்கை அரசுக்கு எதிரான தமிழர்களின் ஆயுத போராட்டம் தீவிரம்பெற
்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கள சிறிலங்காவின் பேரினவாத அரசினால் வெளிப்படையாக ஆரம்பிக்கப்பட்ட தமிழின அழிப்பு நடைபெற்று 29 ஆண்டுகள் ஆகின்றன. அதற்க்கு முன்னரேயே 1958 இலும், 1977 இலும் ஈழத் தமிழினத்திற்கு எதிரான இன அழிப்புக்கள் நடைபெற்றிருந்த போதும், சிங்களப் பேரினவாதத்தின் பயங்கரவாதம், உலகளாவிய வகையில் அன்று அறியப்பட்டது 1983 ஜூலை மாதத்தில்தான். தமிழின அழிப்பு, 2009 இல் அரச பயங்கரவாதத்தின் உச்சத்தைத் தொட்டது.

தமிழீழ மக்கள் தமது பாதுகாப்புக் கருதி, உலகெங்கும் புலம் பெயரத் தொடங்கியதும், ஈழத் தமிழினத்தின் சுதந்திரத்திற்கான போராட்டம் வெளியுலகிற்குத் தெரியத் தொடங்கியதும் 83 ஆண்டுக் காலப் பகுதிதான். அந்த வகையில், புலம் பெயர் வாழ் தமிழீழ மக்களுக்கு ஜூலை 83 என்பதானது சிங்கள அரசுகளின் பயங்கரவாதத்தின் ஒரு குறியீடாக இன்றும் விளங்கி வருகின்றது.

ஜூலை 83 தமிழின அழிப்பு நடைபெற்று 29 ஆண்டுகள் ஆகின்ற இவ் வேளையில் “கறுப்பு ஜூலை 83″ நினைவேந்தல் நிகழ்வின் ஏற்பாடுகளை உலகம் பூராக வாழும் தமிழர்களால் ஏற்பாடு செய்து அனுஷ்டிக்கிறார்கள் .. நாங்களும் பேஸ்புக் நண்பர்களுடன் அனுஷ்டிபோம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்