நான் படித்துக்கொண்டிருக்கிறேன்
ஊருக்கே ஒன்றென ஒப்பாரி வைக்கும் ரேடியோ, கையில் சிகரட்டோடும் கசிப்பு போத்த லோடும் வாசலில் அப்பா
எதிர்த்துப்பேச நாவில்லாமல் வெற்றிலை தின்று இடைவிடாமல் காறித்துப்பும் அம்மா
பகல்முழுதும் கூத்தடித்து பாதி போதையோடு கதவைத் தட்டும் அண்ணா
உதவி ஒத்தாசையென்றுகூறி ஓரமாய் ஒளிந்திருந்து என்னை வெறியோடு பார்க்கும் மாமா
இத்தனைக்கும் மத்தியில்… நான் படித்துக்கொண்டிருக்கிறேன்…
மடியில் உட்காரச்சொல்லி மல்லுக்கட்டும் வாத்தியாரின் பாடங்களை
கருத்துகள்
கருத்துரையிடுக