சிகரட்" பற்றி ஒரு "சீக்ரெட்"..!! கவனமா கேளுங்க

சிகரட்" பற்றி ஒரு "சீக்ரெட்"..!! கவனமா கேளுங்க 
உலக நாடுகளே ஒழிக்க நினைக்கும் ஒரு பொருள்..!
வருடாவருடம் நிதிநிலை அறிக்கையில் வரி உயர்த்தப்படும் ஒரு பொருள்..!! பள்ளிப் பருவத்திலேயே பலரின் விருப்பமான ஒரு பொருள்..!!! ஆயிசு முடிந்து இறப்பவர்களைவிடவும்,இதன் ஆவிபிடித்து இறப்பவர்கள் தான் அதிகமாம்..? இரு சக்கரவாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அனிகிறோம். காரில் செல்லும்போது சீட் பெல்ட் அனிகிறோம்,எதற்கு...
.? நம் உயிரைப் பாதுகாக்கத் தானே...!
பகைவனைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஏன் இந்த பாதுகாப்பு..? என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது..
இவ்வாறு உயிரைக்குடிக்கும் ஒன்றை பெண்னாக சித்தரித்தால்..........

கொடி இடையாள்,

குணத்தில் கொடூரமுடையாள்,

மணத்தில் நெடியுடையாள்..!,

இவளுக்கு பல பெயர்கள்..?

இவள் வசம் பலபேர்கள்..!

நெருப்பால் தன்னை எரித்து - நம்,

நெஞ்சயே எரித்து விடுகிறாள்..!!

தன்னைத் தொட்டவனை - இவள்

சும்மா விட்டதில்லை.!,

தொட்டவனுக்கு - இவள்,

இதயப்புகை வென்மையாக,

இருப்பினும் நம்பாதீர்கள்..?

நம் இதயம் கருத்துவிடும்..!,

கடையில் அது வாங்கினால்,

இது இலவசம் என்பதுபோல்,

இவளைத் தொட்டால்..?

ஆஸ்துமா முதல்...!

ஆண்மைக்குறைவு வரை இலவசம்..!

ஆண்டாண்டு காலமாய் - நம்மை,

ஆட்டிவைக்கும் - இவள் ஒரு,

நவீன விபச்சாரி..!!.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்